நடிகை ஹன்சிகாவிற்கு ஹார்மோன் ஊசி போட்டாரா அவரது தாய்? அம்பலமான உண்மை
நடிகை ஹன்சிகாவின் தாயார் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டாரா என்ற கேள்வி ஹன்சிகா வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஹன்சிகா தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது தெலுங்கு, தமிழ் என வலம்வரும் இவர் தனது நண்பர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து அவரின் கரியர், காதல், கல்யாணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் 'லவ் ஷாதி டிராமா' என்ற டாக்குமென்ட்ரி சீரிஸில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் கடந்த வாரம் தனது திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.
நடிகை ஹன்சிகா தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், இதற்கு சரியான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டிற்குள் ஹன்சிகாவின் வளர்ச்சி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இவர் இவ்வாறு வேகமாக வளர்ந்ததற்கு அவரது தாய் ஹார்மோன் ஊசி செலுத்தியதாக பல செய்திகளும் வெளியானது.
ஹார்மோன் ஊசி செலுத்தியது உண்மையா?
அதில், "பெரும்பாலான பிரபலமானவர்கள் கொடுக்கும் விலை இதுதான். எனக்கு 21 வயதாக இருந்த போது இதைப் பற்றி எழுதினார்கள். அந்த நேரத்தில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்போதே அச்செய்தியை நான் எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும் என்று ஹன்சிகா கூறிய போது அவரது தாயும் இது குறித்து பேசியுள்ளார்.
அவரது தாய் கூறுகையில், இந்த ஹார்மோன் ஊசி தகவல் உண்மையென்றால் நானும் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரராக ஆகியிருப்பேன்... நீங்களும் வளர வேண்டும் என்றால் என்னிடம் வந்திருக்கலாம்... இவ்வாறு எழுதுபவர்கள் பொது அறிவு என்பது இல்லையா என்ற கேள்வி எழுவதுடன், நாங்கள் பஞ்சாபியாக இருப்பதால் எங்களது மகள்கள் 12 வயதிலிருந்து 16 வயதிற்குள் வேகமாக வளர்வார்கள் என்று உண்மையை கூறியுள்ளார்.