ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம்! காதலர் குடும்பத்திற்கு ஹன்சிகாவின் தாய் போட்ட கண்டிஷன்
நடிகை ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கதுரியாவின் குடும்பத்திற்கு, அவரது தாய் போட்ட கண்டிஷன் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஹன்சிகா
கடந்த 2003ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50வது படமான மஹா சமீபத்தில் வெளியானது. நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை டிசம்பர் 4, 2022 அன்று திருமணம் செய்து கொண்டார்.
ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம்
இவர்களின் திருமண காட்சி லவ் ஹாதி டிராமா என்ற பெயரில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் தாய் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் சமீபத்திய எபிசோடில், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி, மணமகன் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.