ஹன்சிகாவின் கணவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பர் 4ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ளது.
குட்டி குஷ்பு
சின்னத்திரையில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹன்சிகா, தமிழ் ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படுபவர்.
தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
துருதுருப்பான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை மயக்கினார் ஹன்சிகா, அடுத்தடுத்து படவாய்ப்புகளும் குவிய முன்னணி நடிகையானார்.
ராஜஸ்தான் கோட்டையில் திருமணம்
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், ராஜஸ்தான் கோட்டையில் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
அதாவது, தன்னுடன் சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.
சொந்தமா டெக்ஸ்டைல் கம்பெனி நடத்திவரும் சோஹைல், சர்வதேச நாடுகளுக்கும் ஆடை ஏற்றுமதி செய்து வருகிறார்.
இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள்.
ஹன்சிகா வெளியிட்ட பதிவுக்கு, I Love My Life என கமெண்டை பதிவிட்டிருந்தார் சோஹைல்.