காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற ஹன்சிகா! எந்த நாட்டிற்கு தெரியுமா?
பிரபல நடிகையான ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய காதலர் சோஹைல் கதூரியாவை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.
ரசிகர்களின் செல்லப்பிள்ளை
குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர்.
இவரது க்யூட்டான முக பாவனைகளுக்காகவே பலரும் ஹன்சிகாவின் ரசிகர்களாக மாறிவிட்டனர் என்றே கூறலாம்.
இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலரும், பிரபல தொழிலதிபருமான சோஹைல் கதூரியாவை ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
காதலனுடன் ரொமான்ஸ்
இந்நிலையில் புதுமண தம்பதிகள் இருவரும் ஆஸ்திரியாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கிருந்தபடியே கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் ஹன்சிகாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகே நின்றபடி, கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அவர் எடுத்துக்கொண்ட படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.