படப்பிடிப்பில் அவமானப்படுத்தும் நபர்கள்... ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு
நடிகை ஹன்சிகா தமிழ் பேசுவதை படப்பிடிப்பில் தான் நிறுத்திக் கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ஹன்சிகா
கடந்த 2003ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50வது படமான மஹா சமீபத்தில் வெளியானது. நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை டிசம்பர் 4, 2022 அன்று திருமணம் செய்து கொண்டார்.
ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணமான நான்கு நாட்களில் படப்பிடிப்பிற்கு சென்ற இவரது கையில் ஏகப்பட்ட படங்கள் குவிந்துள்ளது.
படப்பிடிப்பில் அவமானம்
நடிகை ஹன்சிகா சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியும் சரியாக தமிழ் சரியாக பேசவரவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், படப்பிடிப்பு தளத்தில் தான் தமிழ் பேசுவதை கேட்டால் அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் கொடுக்கும் வசனத்தை மட்டும் பேசிவிட்டு மற்ற இடங்களில் தமிழ் பேசுவதில்லை....
நான் ஓரளவிற்கு முயற்சி செய்து தமிழ் பேசினாலும் மற்றவர்கள் தன்னைப் பார்த்து சிரிப்பதும் எனக்கு அசிங்கமாகவும், அவமானமாகவும் இருக்கின்றது. ஆதலால் வசனத்தை தவிர தமிழ் பேசக்கூடாது என்று முடிவு எடுத்திருப்பதாக ஹன்சிகா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |