சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்... பிரபல நடிகை ஆவேசம்
சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள் என நடிகை காஜல் பசுபதி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவிகளை தவறான முறையில் துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகள் ஊடகங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது.
சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து, சுஷில் ஹரி பள்ளியை நடத்தி வந்த பாபா சிவசங்கரும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், சில பெண்களை வன்புணர்வு செய்ததாகவும் புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து காமக்கொடூரன் பாபா மற்றும் அவனுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியைகள் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததில், காசியாபாத் என்ற இடத்தில் இவனை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். நேற்றிரவு டெல்லியிலிருந்து, சென்னை அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் விருமாண்டி படத்தில் நடித்த நடிகர் சண்முகராஜா, பாபா-வுக்கு ஆதரவாக பேட்டி கொடுக்க, அவை சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால் இந்நடிகருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து நடிகை காஜல் பசுபதி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "பாபாவை தூக்கிலிட வேண்டும்" என தெரிவித்திருந்தார். "shame on you twitter" என்பதை பதிவிட்டு, ரேபிஸ்ட் பாபாவை பற்றி ஒரு வீடியோ பதிவிடலாம் என பதிவிட்டேன். ஆனால் அது அப்லோட் ஆகவில்லை என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
