மில்லியன் பேருக்கு பாடம் புகட்டிய சுட்டி தேவதையின் செயல்! என்ன ஒரு அழகுடா....! வியக்கும் பார்வையாளர்கள்
கொரோனா வந்ததால் ஏகப்பட்ட இழப்புகளை உலகம் சந்தித்தாலும், ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுத்துள்ளது. அது என்னவென்றால், சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாடத்தை கொரோனா புகட்டியுள்ளது. இவற்றையெல்லாம், காலம்காலமாக கடைபிடித்து வந்திருந்தாலும், நாகரீகம் என்ற பெயரில் சமீபகாலத்தில் மறந்துவிட்டோம்.
ஆனால், கொரோனா காலத்தில் வைரஸ் மீது இருந்த பயத்தால், எங்கு சென்றாலும் கை, கால்களை சுத்தம் செய்வது, சானிடைசர் போட்டுக்கொள்வது என தவறாமல் செய்தோம்.
When your first year of life is 2020 was all about HAND SANITIZING ?
— Bangdu (@AreyBangdu) January 21, 2021
wa pic.twitter.com/GFU3Sa60K0
இதனால், திரும்பிய திசைகளெல்லாம் ஒரே சானிட்டைசர் மயம்தான். அப்படி, கொரோனா காலத்தில் சானிடைசர் போட்டுக்கொள்ள பழகிய சுட்டிக் குழந்தை ஒன்றின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
செல்லும் இடங்களில் இருக்கும் எலக்டிரிக் பாக்ஸ், தெரு விளக்கு கம்பம் ஆகியவற்றை பார்த்து சானிடைசர் மெஷின் என நினைத்துக்கொள்ளும் குழந்தை, அதன் அருகில் சென்று சானிடைசரை பெற்று கைகளை சுத்தம் செய்துகொள்வதுபோல் காட்டும் ஆக்சன், பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.