சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஹக்கா மஸ்ரூம்! ரிச் ஓட்டல் சுவையில் இப்படி செஞ்சு பாருங்க..
பொதுவாக வீட்டிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள வரை பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் ஆகிய பொருட்களைக் கொண்டு வித்தியாசமாக செய்துக் கொடுத்தால் காலப்போக்கில் அழுத்து விடுவார்கள்.
அப்படியெனில், அனைவராலும் அதிகமாக விரும்படும் காளானைக் கொண்டு ஆரோக்கியமாகவும் வித்தியாசமாகவும் ஹக்கா மஸ்ரூம் எனும் பெயர்க் கொண்ட ஒரு சுவையான டிஷ் செய்யலாம்.
அந்தவகையில் “ஹக்கா மஸ்ரூம்” எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
ஹக்கா மஸ்ரூமிற்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்
காளான் - 2 கப் (நறுக்கியது)
வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இலகுவான தயாரிப்பு முறை
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர், சோள மாவு மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தேவையானளவு எண்ணெய் சேர்த்து, அந்த எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது பச்சை மிளகாய், பூண்டு மற்றும் காளான் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு 4 - 5 நிமிடங்கள் வதங்கிய பின்னர் காளானை எடுத்து, சோள மாவு கலவையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொள்ளவும்.
பின்னர் கலவையுடன் காளான் வெந்ததும் அதில் வெங்காயத் தாள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கினால் ஆவலுடன் எதிர்பார்த்த ஹக்கா மஸ்ரூம் தயார்!