அழகு நிலையத்தில் ஹேர் வாஷ் செய்த பெண்! ஆத்திரத்தில் ஊழியர் செய்த காரியம்... லீக்கான சிசிடிவி காட்சி
அழகு நிலையத்தில் ஹேர் வாஷ் செய்து கொண்டிருந்த பெண் திடீர் திடீரென தலையை தூக்கியதால் கோபமடைந்த ஹேர் டிரெஸர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அதில், ஹேர் வாஷ் செய்யப்பட்ட பெண் ஒருவர் தன் தோழியுடன் பேசும் ஆர்வத்தில் தலையை அடிக்கடி தூக்கியதால் ஆத்தரமடைந்த ஊழியர் அவரது முகத்தில் தண்ணீர் அடித்துள்ளார்.
2-3 முறை அந்த ஊழியர் தலையை கீழே வைக்கும் படி அவரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் பேச்சின் ஆர்வத்தில் அவர் தன்னையும் மீறி தலையை தூக்கியுள்ளார்.
He can only take so much. pic.twitter.com/w7AGGX9nG7
— Jamie Gnuman197... (@Jamie24272184) July 4, 2021
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் 2-3 முறை அவரது தலைமுடியை பிடித்து இழுப்பது, தலையை தூக்க விடாமல் பிடிப்பது என செய்தார்.
இருந்தாலும் அந்த பெண் தலையை தூக்குவதை நிறுத்தாததால் அந்த ஊழியர் அந்த பெண்ணின் முகம் மற்றும் கண் பகுதிகளில் தண்ணீரை பீச்சி அடித்துவிட்டார். அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே 60 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.