நுனி முடி வெடிப்பு! வீட்டில் இருந்தபடியே சரிசெய்யலாம் தெரியுமா?
பொதுவாகவே இளம் வயதில் இருப்பவர்கள் தலைமுடியை அதிகம் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் வைத்திருக்க எண்ணுவார்கள்.
ஆனால் என்னதான் நமது முடியை பராமரித்துக் கொண்டாலும் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் அதிகமான முடிப்பிரச்சினை வந்துக் கொண்டிருக்கிறது.
அதில் முக்கியப் பிரச்சினைகளாக முடி உதிர்வு, இள நரை, வலுக்கைப் பிரச்சினை என்பன இருந்தாலும் அதில் நுனி முடிகள் வெடிப்பு பிரச்சினையும் ஒன்று தான். இத்தப்பிரச்சினைக்கு வீட்டில் இருந்தே சிறந்த தீர்வினைப் பெறலாம்.
செய்முறை
ஒரு அவகேடோ பழத்தை நன்றாக மசித்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேன், தேங்காய் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு என்பவற்றை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பாவனை முறை
கலந்து எடுத்துக் கொண்ட கலவையை தலைக்கும் நுனி முடிக்கும் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை 30-45 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு தலையை கழுவ வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |