உதிர்ந்த முடி நீளமா வளரணுமா? அப்போ இதை சாப்பிட்டு பாருங்க
பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு சாப்பிட்டுகொண்டு இருப்பதால் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கப்பட்டு நீளமாக வளரும்.
தலைமுடி
பெருஞ்சீரகம் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்டது. இதற்காகவே இதை பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்துகிறார்கள்.
இது சிறிய பொருளாக இருப்பதால் என்னமோ இதன் பலனை பற்றி அனேகமானோருக்கு தெரிவதில்லை. பிறப்பிலேயே ஒரு சிலருக்கு முடி வளர்ச்சி அதிகமாக காகணப்படுகின்றது.
இது வாழ்க்கைமுறையின் சில வேறுபாட்டால் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றது. இந்த பிரச்சனைகளை இதுபோன்ற இயற்கை மூலிகைகளை கொண்டு சரி செய்யவும் முடியும்.
பெருஞ்சீரகத்தில் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கலவைகளும் உள்ளதால், இதை வாயில் போட்டு மெல்லும்போது தலைமுடி உதிர்வு தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அடிக்கடி பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் தலைமுடியின் தண்டுகள் பலமாவதோடு முடி உடைந்து போவதும் குறைகிறது.இதில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கிறது.
இதை தவிர வைட்டமின் ஏ, சி மற்றும் இ, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. முடி உதிர்விற்கு காரணமாக இருப்பது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தமாகும்.
இதை குறைக்கக்கூடிய பிளாவோனாய்டு மற்றும் பீனோலிக் கலவைகள் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்டகள் இதில் அதிகம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு நாளும் உணவிலோ அல்லது உங்களுக்கு பிடித்த முறையில் பெருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வு தானாக நிற்கும். இதற்கு எந்த விதமான மருந்துகளும் தேவைப்படாது.