தலைமுடி தாறுமாறாக வளர வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்க
தற்போது இருக்கும் இந்த பரபரப்பான உலகில், பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை என்றால், தலை முடிவு உதிர்வை சொல்லலாம். இப்போது இருக்கும் குறைந்த வயதினருக்கு கூட, இந்த தலை முடி உதிர்தல் பிரச்சனை இருந்து வருகிறது.
இதற்கு பல தீர்வுகள் சொல்லப்பட்டாலும், இயற்கையான முறையில் சில விஷயங்களை செய்தால், அந்த பிரச்சனை மீண்டும் நம் பக்கம் திரும்பி பார்க்காது. அப்படி தலைமுடி நன்றாக வளர சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
செம்பருத்தி
செம்பருத்தி பூக்களிலே ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூ உள்ளது. அந்த செம்பருத்தி பூவை நன்றாக அரைத்து, பின் அதை நல்லெண்ணெய்யில் காய்ச்சி, வடி கட்டி தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்.
வெண்ணெய்
வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய் தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்தி கழுவி வந்தால், முடி நன்றாக வளரும்.
செம்வரத்தம் இலை
இந்த இலையை அரைத்து தலையில் தடவி, சுமார் அரைமணி நேரம் காயவைத்து, அதன் பின் சீயக்காய் போட்டு அலசுவதன் மூலம், முடி அடத்தியாக வளரும்.
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் நான்கு, கறிவேப்பிலை தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அதை நன்றாக அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து தலைக்கு குளித்தால், நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
கடுக்காய்
கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
வெந்தயம்
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு, தலையில் ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.