கொத்து கொத்தாக கொட்டிய முடி மீண்டும் வளர வேண்டுமா? வீட்டில் தயாரிக்கும் டானிக்கை பயன்படுத்தி பாருங்க
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி பிரச்சினைகளை வீட்டிலிருந்து தீர்ப்பதற்கு ஒரு எண்ணெய்யை தயாரித்து பராமரித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
முடி வளர்ச்சிக்கு ஹோம் டானிக்
முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் டானிக்கை வீட்டிலே செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் கறிவேப்பிலை, தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் என்பவற்றைக் கலக்கி மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த சாற்றை காட்டன் துணி கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின் இந்த சாற்றை முடியின் நுனி வேர் வரைக்கும் நன்கு தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
இந்த ஹேர் டானிக்கை நீங்கள் வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். அப்படி தொடர்ந்து 7 முறை பயன்படுத்திய பிறகு, உங்கள் தலைமுடியில் தடிமன் மற்றும் கருமை இரண்டிற்கும் முன்பு இருந்த முடியை விட இப்போதிருக்கும் முடியின் ஒற்றுமையை கவனிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |