முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்: வீட்டில் செய்ய இந்த இலை இருந்தால் போதும்
தலை முடி அதிகமாக உதிர்கிறது என்றால் அதற்கு மூலிகை இலை போட்டு தயாரிக்கும் எண்ணெய் வீட்டிலேயே செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்
தலைமுடி பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை மூலிகை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். இதற்கு வேறு இரசாயன பொருட்கள் தேவைப்படாது.
தற்போது இருக்கும் வேலை மற்றும் தூசு மாசு காரணமாக முடி உதிர்வு ஒரு பிரச்சனையாக தலைத்தோங்கி உள்ளது. இதற்காக உடலுக்கும் முடிக்கும் நன்மை தரும் ஒரு எண்ணை உள்ளது.
ஆயுர்வேதத்தின்படி தலைமுடி பிரச்சனைகளைச் சரிசெய்ய கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாக பார்க்கப்படுகின்றது. இதில் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், இது முடி உதிர்வைக் குறைக்க உதவுவதுடன், தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது. இந்த மூலிகை , மயிர்க்கால்களிலும் இரத்த ஓட்டத்தை திறம்பட அதிகரிக்கிறது. இது இரத்த விநியோகத்தின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு வேர்களை வளப்படுத்துகிறது.
இதனால் முடி உதிர்வு நிறுத்தபட்டு முடி நன்றாக வளரும். இதை வைத்து எண்ணெய் தயாரிக்க கரிசிலாங்கணி இலைகளை பொடியாக நறுக்கி, ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன்பாத்திரம் ஒன்றில் போட வேண்டும்.
பின்னர் அடுப்பை மிதமான தீயில் விட்டு ஐந்து நிமிடங்கள் அதை கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் தீயை அணைத்து, எண்ணெயை ஆற விடவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
சில நாட்களுக்குப் பிறகு, எண்ணெயை வடிகட்டவும். இப்போது இலைகளின் ஊட்டச்சத்துக்களை எண்ணெயில் முழுமையாக இறங்கி இருக்கும்.
இப்போது வாரத்திற்கு இரண்டு முறை, இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி இரவு முழுவதும் விடலாம். இதை தொடர்ந்து நான்கு மாதங்கள் பயன்படுத்தினால் முடி நன்கு வளரும் பின்னர் நீங்களே வித்தியாசத்தை காண்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |