முடி சும்மா காடு மாதிரி வளரணுமா? வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெயுடன் இத கலந்து பூசுங்க
இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர்.
இந்த பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இல்லாமல் செய்ய முடியும். ஆனால் எல்லா பொருட்களும் நல்ல பலனை தரும் என சொல்ல முடியாது. கேரளா பெண்கள் இயற்கையில் மிகவும் அழகாக இருப்பார்கள்.
அவர்களுக்கு உடலில் கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். இதனால் பல ஆரோக்கிய பொருட்களை கொண்டு கூந்தலை பராமரிப்பார்கள். அதில் தேங்காய் எண்ணெயும் ஒன்று.
தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை கலக்கும் போது, நமது கூந்தலுக்கு நல்லதொரு வளர்ச்சியை கொடுக்கும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சி
பழம் காலத்தில் இருந்து இன்றுவரை தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு பயன்பட்டு வருகின்றது. தேங்காய் எண்ணெய்யுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி இருமடங்கு வேகத்தில் வளரும் என்று கூறப்படுகின்றது.
இவ்விரு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தும் போது, தலைமுடி உதிர்வது குறைந்து, முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும். விளக்கெண்ணெய் என்பது ஆமணக்கு என்னும் தாவரத்தின் கொட்டையில் இருந்து பெறப்படுகிறது.
இந்த எண்ணெய் தலைமுடியை நன்கு ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், மயிர்கால்களுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கின்றன.
இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் ஏற்படும் பூஞ்சை மற்றும் பிற தொற்றுக்களின் அபாயத்தைத் தடுத்து, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ தேவைகளுக்கு பயன்படுகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இந்த எண்ணெய்யை தலைமுடிக்கு தடவுவதன் மூலம், தலைமுடி நல்ல பாதுகாப்புடனும், ஈரப்பதத்துடனும் இருக்கும். எனவே தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணை சேர்த்து தடவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |