இளநரையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் போதும்! கருகருவென வளருமாம்
அனைத்து சமையலிலும் முக்கியமாக சேர்க்கப்படும் கருவேப்பிலையை பெரும்பாலான நபர்கள் ஓரமாக தூக்கி வைத்துவிடுவார்கள். ஆனால் இவ்வாறு நாம் தூக்கி வீசும் கறிவேப்பிலை உங்களை இளமையாக வைத்திருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கறிவேப்பிலையை நாம் சேர்த்துக் கொள்ளும் போது இளநரை, ரத்த சோகை, கண் பார்வை கோளாறு இவைகள் வராமல் தடுக்கப்படுகின்றது. இங்கு இளநரைக்கு கறிவேப்பிலையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கறிவேப்பிலை செய்யும் அற்புதம்
முடி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் என்ற வேதிப்பொருள் இளநரையை சரிசெய்வதுடன், முடியை அடர்த்தியாக வளர வைக்கின்றது.
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்து காணப்படுவதால், தலைச்சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதுடன், இறந்த தலைச்சரும மயிர்த்தண்னை நீக்கி பொடுகு இல்லாமல் பார்த்துக் கொள்கின்றது.
கறிவேப்பிலையில் புரதம் மிகுந்து காணப்படுவதால் முடி உதிர்வை குறைப்பதுடன் முடிவளர்ச்சியை அதிகரிக்கின்றது. மேலும் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?
கறிப்வேப்பிலையை கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து சாறாக பருகலாம். இதன் சுவை பிடிக்காதவர்கள் இதனுடன் மோர் மற்றும் உப்பு கலந்து குடிக்கவும்.
தொடர்ந்து 2 மாதம் இதனை செய்துவந்தால் உடல் அளவிலும், அழகிலும் பெரிய மாற்றத்தினை பெறலாம்.
கறிவேப்பிலை மோர் ஜூஸினை குடித்து முடி கொட்டுவதை நிறுத்தி, இளநரை மறைந்து கருமை மற்றும் அடர்த்தியான முடி நமக்கு கிடைக்கும்.