முடி சும்மா காடு மாதிரி வளரணுமா? இந்த எண்ணையை வாரம் ஒரு முறை தேய்த்தால் போதும்
இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.
இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இதற்கு நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இல்லாமல் செய்ய முடியும்.
ஆனால் எல்லா பொருட்களும் நல்ல பலனை தரும் என சொல்ல முடியாது. எனவே அப்படி முடிக்கு அளகும் தரும் வகையில் ஒரு ணெ்ணையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி வளர்ச்சி
தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை கலக்கும் போது, நமது கூந்தலுக்கு நல்லதொரு வளர்ச்சியை கொடுக்கும். விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டவும், முடியின் வேர்கால்களை வலுப்படுத்தவும், முடி மெலிவதைத் தடுக்கவும் உதவுகின்றன.
இந்த விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் தேய்த்து ஒரு இரவு முழுக்க அப்படியே வைத்து பின் கழுவினால் நல்ல பலன் தரும்.
நெல்லிக்காய் எண்ணெய் நெல்லிக்காய் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது தலைமுடியை வலுப்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும், முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் தலையில் தடவி இரவு முழுக்க அப்படியே விட்டு பின் குளிக்க வேண்டும்.
வெங்காய எண்ணெய் வெங்காய எண்ணெயில் சல்பர் அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும்.
இது கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வாக அமையும் என கூறப்படுகின்றது.
இது தவிர வெங்காய எண்ணெயை இரவு தூங்கும் முன் தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே
ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை வேர்வரை அழுத்தி நன்றாக குளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
இதுபோன் எண்ணைகளை பயன்படுத்துவதால் முடியின் வளர்ச்சி பன்மடங்கு வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இவற்றை வாரம் ஒரு முறை செய்தால் போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |