தாறுமாறாக கூந்தலை வளர்க்கும் காய்கறிகள்- தினசரி உணவில் சேர்க்க தவறாதீங்க
சில கடுமையான சந்தர்ப்பங்களில் தலைமுடி உதிர்வு அதிகமாவதற்கு வாய்ப்பு உள்ளது.
அப்படியான நேரங்களில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி உணவுகள் எடுத்து கொள்வது அவசியம். இவ்வளவு நாட்களாக இழந்த தலைமுடி மீண்டும் பெற நினைப்பவர்கள் உரிய பராமரிப்பு செய்வதுடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்களை கொடுக்க வேண்டும்.
அப்படி வீட்டில் கிடைக்கும் சில காய்கறிகளை கொண்டு தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார். ஏனெனின் காய்கறிகள் தலைமுடியை வளர்ச்சியை தூண்டும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. அதே சமயம், அதிகமான தாதுக்களும் உள்ளன.
அந்த வகையில், வலுவான தலைமுடியை பெற நினைப்பவர்கள் என்னென்ன காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதனை எமது பதிவில் பார்க்கலாம்.
1. பசலைக்கீரை
பச்சை இலைக் காய்கறிகளில் கீரைகள் அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனின் தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான அதிகமான ஊட்டசத்துக்கள் கீரையில் உள்ளன.
உதாரணமாக இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் டி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை கூறலாம். இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தி, ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்கவும் உதவிச் செய்கிறது.
2. பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அத்துடன் வைட்டமின் சி சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் முடி உதிர்தலை எதிர்த்து உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.
3. பூசணிக்காய்
புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகிய ஊட்டசத்துக்கள் பூசணியில் உள்ளது. இது தலைமுடி வளர்ச்சியை தூண்டி, துத்தநாகம் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
அதே போன்று, வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கும். சிலருக்கு உச்சந்தலையில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். அப்படியானவர்கள் பூசணி அடிக்கடி சாப்பிடலாம். இதனால் உங்களின் தலைமுடியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
4. வெள்ளரிக்காய்
மற்ற காய்கறிகளை விட வெள்ளரிக்காயில் புத்துணர்ச்சியூட்டும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே மற்றும் பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தி, புரத இழப்பைத் தடுக்கிறது. இதனால் உங்கள் தலைமுடி பார்ப்பதற்கு அடர்த்தியான, பளபளப்பான முடி கிடைக்கும்.
5. வெங்காயம்
உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் ஒரு அருமையான மூலப்பொருளாக வெங்காயம் பார்க்கப்படுகிறது. இதிலுள்ள துத்தநாகம், கந்தகம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. அத்துடன் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வளர்ச்சியை தூண்டுகிறது. வெங்காயத்தை மேற்பூச்சுப் பயன்படுத்துவதால் முடி மீண்டும் வளர ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |