ஆண்களே! வழுக்கை தலையால் அதிகம் கவலைப்படுகிறீர்களா? இனி இதை பண்ணுங்க
ஆண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே இந்த வழுக்கை பிரச்சினைதான்.
இந்த வழுக்கையால் அவர்கள் பல இடங்களில் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் இல்லாமல் கூட இருந்திருப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கு ஏன் வழுக்கை விழுகிறது. உடலுக்கு ஏற்ற உணவுப்பழக்கவழக்கம் இல்லாமலும், சிலருக்கு பரம்பரை காரணமாகவும் இந்த வழுக்கைப் பிரச்சினை வரும்.
மேலும், ஒரு சிலருக்கு 45 வயது ஆகிவிட்டாலே பல ஆண்களுக்கு தங்களது தலைமுடி பற்றிய பயமும் சேர்ந்து வருகின்றது. இந்த வலுக்கை பிரச்சினை ஏற்படுவதை எம்மால் தடுக்க முடியாவிட்டாலும் சில ஆயுர்வேத வைத்தியங்கள் வழுக்கையை தடுப்பதிற்கு தீர்வாக இருக்கிறது.
ஆயுர்வேத எண்ணெய்
முடி வளர்ச்சிக்கு சிறந்த மருந்துவம் இந்த ஆயுர்வேதம் தான் அதிலும். வல்லாரை பிருங்கராஜ் தைலம் எனும் மூலிகை எண்ணெய். இந்த எண்ணெய் கூந்தல் வறட்சியைத் இல்லாமல் செய்து , முடியின் வேருக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வைக் குறைக்கிறது.
மேலும், இது உங்கள் மன அழுத்தத்தை நீக்கி, இளநரை ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தலைக்கு தொடர்ந்து மசாஜ் செய்வது, உங்கள் முடி வேகமாக வளர உதவும்.
உணவில் சேர்க்க வேண்டியவை
இந்தப்பிரச்சினைகளுக்கு எண்ணெய் தேய்ப்பதோடு விட்டுவிடாமல் உங்கள் நாளந்த உணவில் சில மூலிகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவற்றில் கற்றாழை, கறிவேப்பிலை, செம்பருத்தி, நெல்லிக்காய், வெந்தயம், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.