தலைமுடி கொட்டிக் கொண்டே இருக்கிறதா? சின்ன வெங்காயத்தில் கிடைக்கும் பெரிய மாற்றம்
பொதுவாகவே வெங்காயம் சமையல் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் கூந்தல் அழகையும் பேண உதவும். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த வெங்காயமானது உங்கள் உடல் வெப்பத்தை தணித்து உஷ்ணத்தை சமப்படுத்துகிறது. மேலும், நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
கூந்தலுக்கு சின்ன வெங்காயம்
வெங்காயச் சாற்றில் உள்ள கந்தகம் முடி உதிர்தல் மற்றும் உடைவதைத் தடுக்கிறது.
வெங்காய சாற்றில் கேடலேஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது முடி வேர்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு அளவைக் குறைக்கிறது, அதனால் இது நரை முடியைக் குறைக்கும்.
பொடுகுத் தொல்லையை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வெங்காயச் சாற்றைப் பயன்படுத்துவதன் பொடுகு வரவிடாமல் தடுக்கும்.
வெங்காய சாற்றில் அதிக கந்தக அளவு உள்ளது, இது முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. சல்பர் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் அரிப்புகளை போக்க உதவுகிறது. இது மேல்தோலுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, உச்சந்தலையின் ஈரப்பதத்திற்கு பங்களிக்கிறது.
வெங்காயச் சாற்றில் உள்ள பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உடையக்கூடிய மற்றும் சேதமடைந்த முடியை வலுப்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |