சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏன்?
சர்க்கரை நோய் என்பது நம் உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பயன்படுத்த இயலாத நிலைமையில், உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.
இந்த இன்சுலினை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் உற்பத்திசெய்கின்றன.
இன்சுலின் சமமான நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றும், இது நம் உடலையே சீர்குலைத்துவிடும்.
சர்க்கரை நோயினால், இதய நோய், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு,மேலும் சர்க்கரை நோயினால் ஏற்படும் கால் புண், கண் நோய் என பல்வேறு இணை நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முடி உதிர்வு பிரச்சனை
சாதாரண நபர்களை காட்டிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு முடி உதிர்வும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக ரத்த ஓட்டம் தடைபட்டது எனில் முடி உதிர்தல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால் பாக்டீரியா தொற்று காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் சர்க்கரை நோய் காரணமாக அலர்ஜி ஏற்படுவதனால் கூட முடியின் வேர்கள் சேதமாகும்.
சர்க்கரை நோயாளிகள் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு
முடி உதிர்வை கட்டுப்படுத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் .மேலும் உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும்.
பயோட்டின் நிறைந்த உணவுகள் பாதாம், முட்டை, வேர்க்கடலை, வெங்காயம் மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.