முடி அதிகமாக கொட்டுதா? இனியும் இந்த தவறை செய்யாதீங்க!
பொதுவாக முடி உதிர்வு பிரச்சினை என்பது முன்றைய காலத்தை விட தற்போது உள்ள இளைஞர்களுக்கு பெரிய பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், காற்று மாசுபாடும், தண்ணீரும், உணவு பிரச்சினைகளாலுமே இந்த பிரச்சினை அதிகமாக உண்டாகிறது.
மேலும், தலைமுடியை அதிகமாக கழுவுதல், மற்றும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதாலும், இந்த பிரச்சினை ஏற்படுகிறது. தடுக்க வழிமுறைகள்; தலைமுடியை முதலில் ஷாம்பு கொண்டு குளிக்கும்போது அதிக தண்ணீர் விட்டு, முடியை சரியாக அலசுவது மிக அவசியமாகும்.
அப்படி செய்ய தவறினால், முடிக்கு சேதம் அதிகமாகும். ஷாம்புவை முறையாக அளவோடு பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியைக் கழுவுவதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது வெந்நீரையோ பயன்படுத்த வேண்டாம்.
இதனால் முடி வறண்டு போகலாம். சாதாரண நீரில் முடியைக் கழுவவும். அடுத்ததாக தினமும் தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளிப்பது நல்லது.
தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு, சரியான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். ஆனால் அதிக கண்டிஷனரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பின்னர், தலைமுடியை கழுவி கண்டீஷன் செய்த பிறகு சரியான முறையில் உலர்த்துவது மிக அவசியமாகும்.
எப்போதும் காட்டன் துணியால் முடியை நன்றாக உலர வைக்கவும். ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்ற பராமரிப்பு பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் முடி சேதமடைகிறது.
இவை முடியின் துளைகளை அடைத்து, முடி உதிர்வதற்கு காரணமாகின்றன. முக்கியமாக தலைக்கு குளித்த முடித்த பின் முடியை சாதரணமாக தலையை தேய்க்கவும், முடி சார்ந்த பிரச்சினைகளை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
மேலும், கண்ட கண்ட ரசாயனபொருட்களை அன்றாடம் தேய்ப்பதை தவிர்க்கவும்., இயற்கையோடு இருப்பதே முடிவுக்கு ஒரு சத்துதான்.
எனவே நல்ல தூக்கத்தையும், அதிகமான சிந்தனையும், தவிர்த்து சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலே முடி உதிர்தல் நின்றுவிடும்.