முடி உதிர்வினை பிரச்சனையால் அதிகமாக கஷ்டப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும்
முடி உதிர்தல் பிரச்சனைக்கு வீட்டிலேயே நாம் செய்ய வேண்டிய சில சின்ன சின்ன டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முடி உதிர்தல்
இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் முடி உதிர்வு பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர்.
இதற்காக அதிகமாக பணத்தை செலவழிப்பதுடன், ஷாம்பு, எண்ணெய் இவற்றினை வாங்கி தேய்த்து வருகின்றனர்.
முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சத்து இல்லாமல் இருப்பதே... அதிகளவு ஜங்க் புட் வகைகளை சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகின்றது.

வீட்டு வைத்தியம் என்ன?
சூடான தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முடியின் வேர்களில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வலுப்பெறும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தினை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் பேஸ்டாக அரைத்து, அதனை முடியின் வேர்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின்பு அலசவும். இவை முடி உதிர்வினை நிறுத்துவதற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். இந்த கலவையானது பூஞ்சை தொற்றுகளை குறைத்து முடி உதிர்வை நிறுத்துகின்றது.

புரோட்டீன், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினை உண்ண வேண்டும். காய்கறிகள், உலர் பழங்கள், முட்டை, பால் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு முட்டை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முடியில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்த பின்பு ஷாம்பு கொண்டு நன்றாக அலசவும். புரோட்டீன் நிறைந்த முட்டை முடிக்கு ஊட்டமளிப்பதுடன் முடி உதிர்வைக் குறைக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |