பெண்கள் தலைவாரிக் கொள்ளுவதில் இவ்வளவு நன்மையா?
சில பெண்களுக்கு பெயர் தான் இல்லத்தரசிகள்.... ஆனால் நாள் முழுவதும் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார்கள்.
வீட்டு வேலைகள், சமையல் வேலைகள், பிள்ளைகளை பராமரித்தல், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல் என இவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு தனக்கான வேலைகளை செய்து கொள்வதற்கு அவர்களால் நேரமே ஒதுக்க முடியவில்லை.
தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கும் அவர்களால் நேரம் செலவழிக்க முடியவில்லை. இதில் சில பெண்கள் பெரும்பாலும் விடும் பிழை என்னவென்றால், காலையில் வேலை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது தலைமுடியை அள்ளி முடிந்தார்கள் என்றால் முழுநாளும் அப்படியே இருந்துவிடுவார்கள்.
தலையை நாளை கூட வாரிக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவார்கள். இந்த தலை வாருதல் என்பது அழகு மற்றும் சுத்தம் சார்ந்த விடயம் மாத்திரமல்ல. இதனால் பல நன்மைகளும் உண்டு.
- தினந்தோறும் கூந்தலை வாருவதால் தலையில் உள்ள அழுக்கு, இறந்த செல்கள் என்பன வெளியேறுகின்றன.
- முடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளர உதவுகிறது.
- உச்சந்தலையில் சீப்பு படும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- உச்சந்தலையில் இருக்கும் செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கப்பட்டு சீவம் என்ற எண்ணெயை உற்பத்தி செய்து இயற்கையாகவே முடியை வளர உதவும்.
- எனவே, நாம் தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் கூந்தலை வார வேண்டும். அது ஆரோக்கியத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரியும்.