இளவயதிலேயே ஆண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினையா? இனி இந்த டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்க
தற்போதுள்ளவர்களுக்கு தலைமுடியை பேணி பாதுகாப்பது என்பது மிகப் பெரிய டாஸ்க்காக மாறிக் கொண்டு வருகிறது.
ஏனெனில் நம்மில் பலருக்கு பல காரணங்களால் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரைமுடிப்பிரச்சினை என பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி சம்பந்தமான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
அதிலும் ஆண்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை. சிறுவயதிலேயே இளநரை, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு 24, 25 வயதிலேயே முடியை இழக்க நேரிடும். அப்படி ஆண்கள் முடியை பேணி பாதுகாக்க சில ஈஸியான டிப்ஸ்களை கடைப்பிடியுங்கள்.
ஆண்களின் முடியை பாதுகாக்க
- அதிகம் முடி உதிர்வு கொண்ட ஆண்கள் தலை சீவும் போது நெருக்கமான பல் கொண்ட சீப்பில் சீவாமல் அகல பல் கொண்ட சீப்பில் சீவ வேண்டும்.
- தலைமுடிக்கு சவக்காரம் போட்டு கழுவுவதை தவிர்க்க வேண்டும்.
- வாரத்திற்கு ஒரு முறை சீயக்காய், நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.
- புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு அதிகம் தலைமுடி உதிர்வு இருக்கும் அதனால் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.
- தலைமுடிக்கு ஹேர் கண்டிஷனர்கள் பயன்படுத்தும் ஆண்கள் வாரத்திற்கு இரண்டு முறை மாத்திரம் பயன்படுத்தினால் போதும்.
- ஆண்கள் உடலுக்கு தேவையான அளவு உறக்கம் இல்லையென்றாலும் முடி உதிர்வு ஏற்படும்.
- மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- தலைமுடிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ள உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியமானது என்பதால் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.
- ஆண்கள் குளித்து முடித்தவுடன் தலைமுடியை உலர்த்த ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்துவார்கள் இவ்வாறு பயன்படுத்துவது முடி உதிர்வை அதிகரிக்கும்.
- குறைந்த விலையில் கிடைக்கும்ஹேர் ஸ்டைல் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |