இனி செய்யாதீங்க.. தலைமுடி உதிர்வை அதிகப்படுத்தும் 5 தவறுகள்
பொதுவாக தலைமுடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. என்னதான் தலைமுடியை பராமரித்தாலும், தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் மாத்திரம் சிலருக்கு குறைவதில்லை.
தலைமுடியை சரியாக பராமரித்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைபிடிக்காத போது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது. அதே சமயம், தலைமுடி பராமரிப்பு பற்றிய அறியாமையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட மருத்துவர்கள் பரிந்துரைகளை வழங்கி வருகிறார்கள்.
அப்படியாயின், தலைமுடி வளர்ச்சியை கட்டுபடுத்தும் என நாம் பயன்படுத்தும் பொருட்கள் எந்தளவு நமக்கு உதவியாக உள்ளது என்பதற்கு விளக்கம் கொடுத்து காணொளியொன்றை மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகம் உள்ளவர்கள் செய்யக் கூடாத தவறுகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.
5 தவறுகள்
1. ஷாம்பூ பாவனை
தலைக்கு குளிக்கும் பொழுது சரியான ஷாம்பூக்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஏனெனின் தலைமுடி உதிர்வுக்கு காரணமாக இருக்கும் ஷாம்பூக்கள் பெரும்பாலும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது.
2. கண்டிஷனர் பாவனை
தலைமுடியை பாதுகாக்க நினைப்பவர்கள் கட்டாயம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஏனெனின் தலைமுடியில் உள்ள சிக்கல்களை எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும். சிலர் ஷாம்பூ மாத்திரம் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு அதிகமான தலைமுடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3.Hair Mask
தலைமுடி பராமரிப்பில் Hair Mask முக்கிய இடம் பிடிக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
4.Hair oil
சிலர் தலைக்கு எண்ணெய் வைப்பதை தேவையற்ற வேலையாக நினைப்பார்கள். ஆனால் இதுவும் தலைமுடி உதிர்வை குறைக்கும். அத்துடன் பொடுகு பிரச்சினையுள்ளவர்களுக்கும் உதவியாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை சரி எண்ணெய் வைத்து குளிப்பது நல்லது.
5. சீரம் பாவனை
தலைமுடியை பாதுகாக்க நினைப்பவர்கள் சீரம் பயன்படுத்தலாம். இது தலைமுடிக்கு தேவையான சத்துக்களை நேரடியாக கொடுத்து, தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
