Haiku poems: பலரின் வாழ்க்கையையும் புரட்டி போட வைக்கும் ஹைக்கூ கவிதைகள்
ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ என அழைக்கப்படும் கவிதைகள் மூன்று வரிகளில் எழுதப்படுகின்றன.
இதனை மூன்று வரிகள் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு எழுதும் ஜப்பானியக் கவிதை வடிவமாகும்.
இப்படியான கவிதைகள் மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.
17ம் நூற்றாண்டில் “பாசோ” என்பவர் இந்த கவிதைகளை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்திய போது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது.
ஜப்பானிய புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருக்கும் ஹைக்கூ கவிதைகளை விவரணக்கவிஞர்களும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எழுதி வருகிறார்கள்.
அந்த வகையில், ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
1. எப்படி சொன்னாலும்
புரிய மறுக்கிறது நாய்.
நன்றி கெட்டவர்கள் நாங்களென
2. சொந்தமண்ணிலிருந்து!
துரத்தப்பட்ட அகதி!
துடுப்பற்ற பரிசல்!
பிறைநிலா
3. வரிசையாய் வந்த எறும்புகள்
வாசனை அறிந்ததும் வட்டமிடுகின்றன
வாசலில் போட்ட புள்ளிக்கோலத்தைச் சுற்றி.
4. மூத்தவளை விட்டு விட்டு
இளையவலுக்கு மட்டும் மகுடம்
சூட்டப்படுகிறது மணமகளின் கால்களில் - மெட்டி
5. இரவில் ஒளி திருடியதால்
பகலில் ஒளிந்து கொள்கிறாள்
நிலா.
6. விடிந்ததும்
இருண்டு விடுகிறது
தெருவிளக்கின் வாழ்க்கை...!!!
7. யாரும் விளையாட வராததால்
காற்று கலைத்துப்போட்டது
மேகப் பொம்மைகளை...
8. தென்றலும் புயலுமாய்
மனம் தொடும்
காற்று நினைவுகள்
9. ஒரே பத்திரிகையில்
பிறந்த நாள் வாழ்த்தும்
நினைவஞ்சலியும் வாழ்க்கை...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |