விவாகரத்துக்கு பின் மகளுடன் தீபாவளி கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ்: சைந்தவியின் ரியாக்ஷன்!
சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனது மகளுடன் தீபாவளி கொண்டாடிய காணொளி இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2020ம் ஆண்டு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் இவர்களது திருமண வாழ்க்கை மேலும், சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர்.
சமீபத்தில், நீதிமன்றம் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கிய செய்தியும் இணையத்தில் வைரலானது. விவாகரத்துக்கு பின்னரும் தனது மகளுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து வருகின்றார்.
இந்நிலையில், தனது மகள் அன்வியுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் ஜாலியாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரிந்தாலும், மகளுடன் ஜி.வி. பிரகாஷ் கொண்டாடிய இந்த வைரல் வீடியோவுக்கு, அவருடைய முன்னாள் மனைவி சைந்தவி லைக்கும் போட்டு தன்னோட சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
