ஜி.வி பிரகாஷிற்கு இவ்வளவு பெரிய மகளா? வீட்டில் பிள்ளையுடன் கொஞ்சு விளையாடிய Video
நடிகர் ஜி.வி பிரகாஷ் மகளுடன் கொஞ்சு விளையாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.
இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
மகளுடன் இருக்கும் காணொளி
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.
இதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தற்போது தம்பதிகளாக இல்லாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குழந்தை அம்மா- அப்பா இருவருடன் இருக்கும் காணொளிகளை இணையத்தில் பார்த்திருப்போம்.
அந்த வகையில், ஜி.வி.பிரகாஷ் மகளுடன் கொஞ்சு விளையாடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த பலரும், பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வது தந்தையின் அதிர்ஷ்டம்..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |