ஐஸ்வர்யா ராய்க்கு “இந்த” பழக்கம் இருக்கு.. நாத்துனார் பகிர்ந்து விஷயம்- வாயடைத்து போன ரசிகர்கள்
ஐஸ்வர்யா ராயிடம் பிடிக்காத விஷயம் பற்றி அவருடைய நாத்தனார் பகிர்ந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
இந்தியாவில் முதல் உலக அழகி பட்டத்தை வாங்கியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இவர் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர், உலக அழகி பட்டத்தை கடந்த 1994 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவான “இருவர்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடைசியாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியாக வெற்றிநடைப்போட்டது. இந்த திரைப்படத்தில் நந்தனி கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பால் ரசிகர்களை மிரட்டியிருப்பார்.
நாத்துனாருக்கு பிடிக்காத விடயம்
இந்த நிலையில் சமீபக்காலமாக நடிகை ஐஸ்வர்யா ராய் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்து விட்டதாகவும், மகளுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சினிமா நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள் ஆகியவற்றில் கூட இரண்டு குடும்பங்களாக கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில் மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் பற்றிய இன்னொரு செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
அதாவது, அபிஷேக் பச்சனின் மூத்த சகோதரியான ஸ்வேதா பச்சன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டிக் கொடுத்த போது தனது அண்ணியாரான ஐஸ்வர்யா ராய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதில் ஐஸ்வர்யா ராயிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை கூற வேண்டிய நிலை வந்தது.
அப்போது சற்றும் யோசிக்காமல், “அவர் தைரியமானவர். கடினமாக உழைத்து சினிமாவில் உச்சத்திற்கு வந்தார். இது அவரிடம் தனக்கு மிகவும் பிடிக்கும். மாறாக அவருக்கு ஃபோன் செய்தாலோ, மெசேஜ் அனுப்பினாலோ உடனே பதிலளிக்க மாட்டார். அவருக்கு தோன்றும் போது தான் அவரிடமிருந்து பதில் வரும். இது தனக்கு பிடிக்கவில்லை..” என பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |