பரீனாவுக்கு திருமணமானதே தெரியாமல் வாயை விட்ட ஜோதிடர்! நடந்த சம்பவத்தை பாருங்க
ஜீ தமிழில் வாரம் தோறும் ஒளிப்பரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம், குருபெயர்ச்சி ராசிபலன்கள் 2026 ஜோதிடர்கள் மற்றும் பிரபலங்கள் எனும் தலைப்பில், சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற பிரபல சின்னத்திரை நடிகை பரீனாவின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை கணித்த ஒரு ஜோதிடர் அவருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் இருப்பதை அறியாது, குரு பெயர்ச்சி கணிப்பின் பிரகாரம் இவருக்கு காதல் திருமணம் நடக்கும் என குறிப்பிட்டதும், அதற்கு பரீனா கொடுத்த பதிலும் இணையத்தில் கவமனம் பெற்றுள்ளது.

தமிழா தமிழா நிகழ்ச்சி
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் குருபெயர்ச்சி ராசிபலன்கள் 2026 ஜோதிடர்கள் மற்றும் பிரபலங்கள் எனும் தலைப்பில்,சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |