குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022 - மேஷ ராசிக்கும் இனி வரும் ராஜயோக அதிர்ஷ்டம் என்ன?
இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு வாழ்கையில் மிக உன்னதமான மாற்றங்களை சந்திப்பீர்கள். புதிய பாதையில் செல்வதற்கான உங்கள் வாழ்க்கை பயணம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.
எடுத்த முயற்சிகள் அனைத்து வெற்றி அடையும், குடும்பத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். பழைய சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேர எந்த வித தாமதமும் இருக்காது.
குழந்தைகளின் கல்வி சம்பந்தமான தடைகள் நீங்கும். புதிய சேமிப்பு திட்ட்களில் சேர்வீர்கள். வீட்டில் திருமண சுப காரியங்கள் நடைபெறும். எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து சிந்திக்க தொடங்குவீர்கள்.
புது வீடு கட்டிடம் கிரகப்பிரவேசம் செய்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும்., நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.
இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும். வண்டி, வாகனவசதிகள் சிலருக்கு வாங்க அமையக்கூடும்.
ஞாபக மறதி, உடல்சோர்வு சில நேரங்களில் ஏற்படக்கூடும். வெளியில் சுற்றுலா பயணங்கள் செய்தால், குளங்களில் குளிர்ப்பதை தவிர்க்க வேண்டும். அரசியல் வாதிகள் சில நேரங்களில் மனதைரியத்துடன் பொறுமை காத்திருக்கவேண்டும்.
பெண்களுக்கு திருமணம் தடை இனி கைக்கூடும். மேலும், இந்த குருப்பெயர்ச்சியில், புதிய முயற்ச்சிகளை அவசரத்தில் எடுக்காதீர்கள். ஒரு முறைக்கு பல முறை யோசித்த பின் அதை செயல்படுத்துங்கள். எதிர்பாராத தன வரவுகள் வந்து சேரும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நாள் :
செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி
பரிகாரம் :
செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.