12 ஆண்டுகளின் பின் ஆரம்ப ராசியில் வக்ரமடைந்திருக்கும் குரு... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி மங்களகரமான கிரகமாக பார்க்கப்படுவது இந்த வியாழன் குரு பகவான் தான். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாவார்.
இவர் ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாற்றிக் கொண்டிருப்பார். அவ்வாறு ராசியை மாற்றும் போது அதன் தாக்கமானது ஏனைய ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களைக் கொடுக்கும்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்குள் செல்கிறார். இவர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இந்த மேஷ ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
மேலும், இந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பத்தில் மேஷ ராசியில் குரு பகவான் வக்ரமாவதால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாவதால் ரிஷப ராசிக்காரர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வரவுக்கு அதிகமான செலவுகளை சந்திப்பார்கள். அடிக்கடி பணப்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் கைக்கு மீறிய செலவுகளை சந்திப்பீர்கள். குடும்ப விடயத்தில் எடுக்கும் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆரோக்கியம் அதிகம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. திருமணமான தம்பதிகள் இடையில் அதிக கருத்து வேறுபாடு ஏற்படும்.
கன்னி
இந்த ராசியின் 8ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரமாகிறார். அதனால் உங்களுக்கு அதிகம் ஆரோக்கியம் பாதிக்கப்படும். திருமணம் முடித்தவர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் அமையிழந்து வெறும் சண்டைச் சச்சரவுகள் மட்டும் தொடரும். புதிய வேலைகளுக்கு மாற வேண்டாம். அதுபோல முதலீடு பிரச்சினைகளுக்கு இப்போதைக்கு நுழைய வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகிறார். அதனால் இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் புதிய புதிய பிரச்சினைகளை சந்திக நேரும். சற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். அதிகமான கடன்களை வாங்கும் சூழல் ஏற்படும். ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிப்பட நேரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |