குரு வக்ர நிவர்த்தியால் உயரும் தங்கம் விலை! இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏற்பட போகும் திடீர் மாற்றம்
Hinduism
Gold
By Nivetha
ஜூலை மாத இறுதியில் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியடைந்த குரு பகவான் மீன ராசியில் தற்போது நேர்கதி பயணத்தை தொடங்கியுள்ளார்.
குருவின் இந்த வக்ர நிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பொருளாதாரத்தில் பெரியளவில் மந்த நிலை உருவாகியுள்ளது.
அதுவும் காலபுருஷ தத்துவத்தில் 12ம் இடம் எனும் விரய ஸ்தானத்தில் குரு வக்ர நிலை பெற்றிருந்தார்.
மலைப்போல் உயரும் தங்கம் விலை
இதனால் தனி மனிதருக்கு மட்டுமல்லாமல், உலகளவில் இதன் பாதிப்பு இருந்தது. தற்போது குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
இதனால் நிலைமை சற்று சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இனி மிண்டும் புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.
12 ராசியினருக்கும் குருவின் வக்ர நிவர்த்தி பலன்கள்
மேஷம்
குருவின் வக்ர நிவர்த்தியால் அதிக செலவுகள் செய்ய வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையோ, கடன் வாங்குவதையோ தவிர்ப்பது அவசியம்.
ரிஷபம்
உங்களின் நிதி நிலை, வருமானம் பெருகும். உங்கள் முழு பலத்துடன், நம்பிக்கையுடன் உழைத்தால் எதிலும் சிறப்பான வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்கு நிலம், வீடு, மனை போன்ற சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக அமையும். வீடு,வாகன யோகம் உண்டு.
கடகம்
உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்பிரசாதமாகக் கிடைக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பும் உள்ளது.
சிம்மம்
எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை சந்திப்பீர்கள். பணியிடத்தில் சிலரின் சதிக்கு இரையாவதைத் தவிர்க்கவும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி
ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் கூட்டு வர்த்தகத்தை தவிர்க்கவும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம்
உங்களின் குடும்பம், பணியிடத்தில் மரியாதை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடன் வாங்குதல், பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
செல்வாக்கு பாதிக்கப்படலாம். பல எதிர்பாராத ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். வீடு, மனை சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும்.
மகரம்
குருவின் செல்வாக்கு உங்களுக்கு பல வகையில் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
கும்பம்
நிதி நிலை சிறப்பாகவே இருக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.
மீனம்
உங்களின் பணிகள் பாராட்டப்படும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் கூடும். ஒருமுறை முடிவெடுத்தால், அதிலேயே கவனம் செலுத்தி செயல்படுவது அவசியம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US