குருவால் இன்னல்களை சந்திக்கும் 4 ராசிகள்... எச்சரிக்கை அவசியம்
குருவின் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை சில ராசிகள் சந்தித்தாலும் இன்னல்களையும் சில ராசியினர் சந்திக்க உள்ளார்கள். அந்த ராசிகளை குறித்து தெரிந்து கொள்வோம்.
நவ கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடிய குரு பகவான், ஒருவரது ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்கள் பேரதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவார்கள். கிரகங்கள் அவ்வப்போது தனது ராசியை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேஷ ராசியில் இருக்கும் குரு வரும் 4ம் தேதி அதே ராசியில் வக்ர நிலையடைகின்றார். இதனால் சில ராசிகள் கஷ்டங்களை சந்திக்க உள்ளனர்.
மேஷ ராசி
குருபகவான் வக்கிர நிலையில் வரவுள்ள காரணத்தினால் சில சிக்கல்களை சந்திப்பார்கள். முடிவெடுப்பதில் சிரமங்கள் ஏற்படுவதுடன், புதிய முயற்சியிகளை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதுடன் மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதையும் தவிர்க்கவும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியினர் இந்த குருவின் வக்ர நிலையால், பெண்கள் உடல்நலத்தில் சில சிக்கல்களை சந்திக்க உள்ளனர். பெற்றோரின் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் ஆரோசனை செய்த பின்பு முடிவு எடுக்கவும், பெரிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். துன்பங்கள் வந்தால் நகர்ந்து செல்வது நல்லது.
கடக ராசி
கடக ராசியினருக்கு இதனால் சாதகமான சூழ்நிலை உண்டாவதுடன், புதிய வாய்ப்பு வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையை திட்டமிட்டு செய்வதுடன், உடல் ஆரோக்கியத்தையும் சற்று கவனமாக எடுத்துக்கொள்ளவும்.
சிம்ம ராசி
குருவின் இந்த வக்கிர நிலையினால் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கை தேவை. நீண்ட பயணங்களை தவிர்கக வேண்டும், கருத்து வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும். தேவையற்ற விவாதங்களையும் தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |