குரு - சூரியன் சேர்க்கை.. ஜூலை 16 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பணம் கொட்டும்
ஜூலை 16 முதல் கடக ராசியில் நிகழவுள்ள குரு-சூரியன் சேர்க்கையால் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்' மூலம் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 6 ராசிகளுக்கு பெரும் செல்வமும் யோகமும் கிடைக்கவுள்ளது.
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிற்கு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்ளும். அதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும் இருக்கும். அந்த வகையில், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தனது ராசியை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்துக்கொள்ளும். அதேபோல் குரு பகவானும் தனது ராசியை ஆண்டிற்கு ஒருமுறை மாற்றுவார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில், கடக ராசிக்கு ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசியில் குரு மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கையானது குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை என ஒரு மாத காலம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில், குரு அதித்ய ராஜயோகம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மட்டும் நல்ல செல்வத்தையும் வளர்ச்சியையும் கொடுக்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு 4 ஆம் இடத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம் காரணமாக, எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த கடன் சுமைகள் படிப்படியாக குறையும். தொழில் அல்லது வேலை நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு பெரும் லாபத்தை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் துணையோடு பணியிடத்தில் நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து உயர்வதுடன், மாணவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமாக அமையும். தம்பதியரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தம்பதி பிணைப்பு பலப்படும்.

மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆம் இடத்தில் இந்த ராஜயோகம் அமைவதால், உங்கள் வாழ்க்கை தரம் உயரும் வகையில் பல சாதகமான மாற்றங்கள் நிகழும். பொருளாதார ரீதியாக மிகவும் வலுவான நிலையை அடைவீர்கள். தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றியில் முடியும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிப்பதுடன், சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் கூடும். உத்தியோகம் மற்றும் சொந்த வாழ்க்கை என இரண்டிலுமே சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு 12 ஆம் வீட்டில் இந்த யோகம் அமைவதால், குடும்பத்திற்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் தங்கும். பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார நிலை சீராகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணவரவு உண்டாக வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். கடன்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் பிறக்கும். புதிய விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உத்தியோகம் மற்றும் கல்வியில் மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு 11-ஆம் இடத்தில் தோன்றும் குரு ஆதித்ய ராஜயோகம், தொழிலில் புதிய உச்சத்தை அடைவதற்கான பிரகாசமான வாய்ப்புகளை உருவாக்கும். சொத்துச் சேர்க்கை ஏற்படுவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சீராகும். சகல வசதிகளும் பெருகும் யோகம் உண்டாகும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆம் வீட்டில் இந்த யோகம் உருவாவதால், உங்கள் நிதி நிலைமையில் அசுர வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இருந்து வந்த மந்த நிலை மாறி, தொழில் ரீதியான பணப் பற்றாக்குறைகள் அனைத்தும் தீரும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதுடன், அது உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுவதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். திட்டமிட்ட காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்கு 8 ஆம் இடத்தில் இந்த ராஜயோகம் அமைவதால், சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் ஓங்கும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கி கிடந்த நிலுவைத் தொகைகள் மற்றும் வாராக்கடன்கள் வசதியாகும். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும். கோர்ட், கேஸ் போன்ற சட்ட ரீதியான சிக்கல்களிலிருந்து உங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, சேமிப்பு உயரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |