குரு பெயர்ச்சி பலன்கள் 2024: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ மழை கொட்டும்
மிகவும் மங்களகரமான கிரகமாகவும், அனைத்து கடவுள்களின் குருவாகவும் பார்க்கப்படும் வியாழனின் பெயர்ச்சி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும், அனைத்து செல்வங்களையும் பெறுவார்.
அதுவே பலவீனமாக இருந்தால் நிதி சிக்கல்கள் முதற்கொண்டு பிரச்சனைகள் இருக்கும்.
2024ம் ஆண்டு, மே 1ம் திகதி, வியாழன் மேஷ ராசியில் இருந்து ரிஷபத்துக்கு(கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்).
இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
குரு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படும், நினைத்த காரியங்கள் வெற்றியில் முடியும், வியாபாரத்தில் லாபம் உண்டு, சுபநிகழ்ச்சிகள் நடைபெறும், குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி அமைதி நிலவும்.
ரிஷபம்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன், எனவே எல்லாவிதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள், திருமணம் கைக்கூடும், வீட்டில் இன்பம் அதிகரிக்கும், வருமானம் பெருகும், சமூகத்தில் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 11வது வீட்டில் வியாழன் இடம்பெறுகிறார், இதனால் வருமானம் பெருகும், புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ள நபர்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம், ஏற்கனவே செய்து வரும் தொழிலிலும் வெற்றி உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், கணவன்- மனைவி உறவு பலப்படும்.
கன்னி
கன்னி ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் குரு இருப்பதால் மகிழ்ச்சியே, வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும், திருமண யோகம் உண்டு, பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், இழுபறியில் இருந்து வேலைகள் முடிவுக்கு வரும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
விருச்சிகம்
2024 ஆம் ஆண்டு ராசி மாறிய பிறகு, குரு விருச்சிக ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்வார். இந்த வீட்டில் வியாழன் சஞ்சரிப்பதால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அபரிமிதமாக அதிகரிக்கும். அதே அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |