குருபெயர்ச்சியால் தேடிவரும் அதிர்ஷ்டம்! ராஜயோகத்தை அடையும் 4 ராசிகள்
குரு பெயர்ச்சி அடைந்து மேஷ ராசியில் சஞ்சரித்துவருவதால் சில ராசிகள் ராஜயோகத்தினை அடைகின்றது. அவைகளைக் குறித்து இங்கு காணலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி குரு பகவான் மேஷ ராசிக்கு சென்றுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவதும் அதே ராசியில் இருப்பதால் சில ராசியினருக்கு அதிர்ஷட காலம் ஏற்படுகின்றது.
மேஷம்
குரு பகவான் அமர்ந்திருக்கும் மேஷ ராசியினருக்கு தைரியம் வீரம் அதிகரிப்பதுடன், தொழிலில் முன்னேற்றமும் அடைவாகர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகவும் இருக்கு இந்த காலக்கட்டத்தில், பணவரவும் அமோகமாக இருப்பதுடன் அதிர்ஷ்டம் தேடி வரும். நிம்மதியாக குடும்ப வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், பல நல்ல செய்திகளும் வந்தடையும்.
மிதுனம்
குரு பெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்காரர்கள் வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நிலையில், பணபரிவர்த்தனைகளுக்கு இந்த காலம் உகந்ததாகவே இருக்கும்.
பதவி மற்றும் சம்பள உயர்வு ஏற்படும் நிலையில், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் செய்கின்றது.
சிம்மம்
நல்ல காலம் பிறந்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள், எந்த முதலீட்டிலும் லாபம் கிடைப்பதுடன், சமூகத்தில் அந்தஸ்து உயருவதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகள் நீங்கி பணவரவும் ஏற்படும்.
தனுசு
மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நல்ல பலன்களை அளிப்பதுடன், பதவி உயர்வும் கிடைக்கும். ஆனால் செலவினை கட்டுப்படுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிப்பதுடன், எதிரிகள் உங்கள் முன்பு நிற்க முடியாத சூழ்நிலையும் உருவாகுவதுடன், உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாகவே இருக்கும்.