லண்டனை குறி வைக்கும் குரு பகவான்! பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர்
குரு பெயர்ச்சி நவம்பர் 13ம் தேதி நிகழ உள்ள நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் இதனால் ஏற்படவுள்ள நன்மை, தீமைகள் குறித்து கணித்துள்ளார்.
மேஷ ராசிக்கு 11ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் அவரின் பார்வை பலனால் எப்படிப்பட்ட பலன்களைத் தருவார். எந்த கால கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருந்தால் நற்பலன் ஏற்படும் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.
லண்டன் போன்ற நாடுகளாக இருந்தாலும் குரு பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது. லண்டனில் இருப்பவர்கள் முதலிடுகளை குறைந்த காலத்திற்கு தாய் நாட்டில் வைத்து கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக பாதுகாப்பு இருக்க கூடிய இடத்தில் வைத்து கொள்ளுவது சிறப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். குரு நின்ற இடத்தை விட, அவரின் பார்வைக்கு பலன் அதிகம் என்பது ஜோதிட விதி.
குருவின் 5ம் பார்வை புதன் ஆளக்கூடிய மிதுன ராசி மீது விழுவதால், எழுத்து துறை, கலைத் துறையில் இருக்கும் மேஷ ராசிக்கு, சிறு முயற்சிகளுக்கு நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். அதோடு உங்களின் வீரிய ஸ்தானம் மீது குரு பார்வை உள்ளதால், உங்களின் முயற்சிகள் அதிகமாகும்.
அதனால் உங்களின் முயற்சிக்கேற்ப முன்னேற்றமும் அதிகமாக இருக்கும். மேஷ ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதும், கர்ம ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதாலும், குருவின் பார்வை தைரிய, வீரிய, முயற்சி ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது புத்திர காரகன் குருவின் பார்வை விழுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.