குரு பெயர்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து நவம்பரில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் நடப்பது என்ன? இந்த 4 ராசிக்கும் விபரீத ராஜயோகம்!
2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகப்பெயர்ச்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நவம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள்
- நவம்பர் 2, 2021 அன்று துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி
- நவம்பர் 2, 2021 அன்று துலாம் ராசியில் புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை
- நவம்பர் 16, 2021 அன்று விருச்சிக ராசியில் சூரிய சஞ்சாரம்
- நவம்பர் 17, 2021 அன்று விருச்சிக ராசியில் சூரியனும் கேதுவும் சேர்க்கை
- நவம்பர் 18, 2021 அன்று பௌர்ணமி பகுதி சந்திர கிரகணம்
- நவம்பர் 18, 2021 நவம்பர் 21, 2021 அன்று கும்ப ராசியில் குரு பெயர்ச்சி
- நவம்பர் 21, 2021 அன்று விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி
- நவம்பர் 21, 2021 அன்று விருச்சிக ராசியில் சூரியன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை
- நவம்பர் 2 அன்று புதன், சூரியன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது.
- அதன் பின்னர் நவ 21ம் தேதி சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை விருச்சிக ராசியில் நிகழ்கிறது.
இதுபோன்று பெரிய கிரகப் பெயர்ச்சிகளால் எந்த ராசிகளுக்கெல்லாம் சுப பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் உங்களின் திருமண வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும்.
துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். நவ 20ல் நடக்கும் குரு பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ராசிக்கு மிக அதிக பலன்கள் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், லாபம் என நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் தடைப்பட்ட காரியங்கள் செய்து முடிப்பீர்கள்.
நவம்பர் 22ல் புதன் உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு செல்வதால் மேஷ ராசிக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் உருவாகும்.
கடகம்
மாத தொடக்கத்தில் 4ம் வீட்டிலும், 22ம் தேதி 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யக்கூடிய புதன் கடக ராசிக்கு மிக அற்புத பலன்களைத் தருபவராக இருப்பார்.
உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள்ந் நீங்கும். உங்கள் அறிவுத்திறன் மூலம் தொழில் துறையில் நல்ல பல்னக்ளைப் பெற்றிடுவீர்கள். புதாதித்ய யோகத்தைப் பெற உள்ளீர்கள்.
இதனால் கல்வி, தொழில் என இந்த இரண்டிலும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மாத நடுவில் சூரிய உங்கள் ராசிக்கு 5ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் ஆரோக்கியம் மேம்படும்.
நிதி நிலை, சொத்துக்கள் சேருதல் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கு பேச்சு மற்றும் மன தைரியமும் இந்த மாதம் அதிகரிக்கும். புதன் முதலில் உங்கள் இரண்டாவது வீட்டிலும், பின்னர் மூன்றாவது வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளார்.
அதே நேரத்தில் சூரியன் உங்கள் மூன்றாவது வீடான தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதனால் சாகசப் பணிகளை அனுசரித்துச் செல்வீர்கள். அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
விருச்சிக ராசியில் புதன்-சூரியன் பிரவேசிப்பதால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் நிச்சயமற்ற பலன்கள் கிடைக்கும்.
சில நேரங்களில் நன்மைகளையும், சில நேரங்களில் எதிர்மறை பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பேச்சில் தாக்கத்தால் நேர்மறையான அடையாளம் உருவாகும். மாணவர்கள் எதிர்காலத்தை வலுவாக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
மகரம்
நவம்பர் மாதத்தில் மகர ராசியினரின் விருப்பங்கள் நிறைவேறும்.
புதன் உங்கள் ராசிக்கு 10 மற்றும் 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வார். மாத தொடக்கத்தில் 10ல் புதன் இருக்கும் போது தொழில் துறையில் நல்ல முன்னேற்றமும், உத்தியோகத்தில் நற்பெயரும் கிடைக்கும்.
11ல் புதன் இருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இதனால் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பேச்சில் தெளிவு கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.