12 ஆண்டுகளின் பின் கடகத்தில் குரு பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவதால் உருவாகும் ராஜ யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பது தான்.
அந்தவகையில், தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உச்ச வீடான கடக ராசியில் ஜூன் 2, ஆம் திகதி பெயர்ச்சியாகின்றார்.

குறித்த பெயர்ச்சியானது மிகச்சிறந்த ராஜயோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடிய மங்களகரமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்ச பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இங்கு பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்குல் குரு பெயர்ச்சி நிகழ்வதால் இவர்களுக்கு முன்னைய முதலீடுகளால் அதிக லாபம் கிடைக்கும்.
இவர்கள் தொழில் ரீதியாக எதிர்கொண்ட தடைகள் நீங்கி முன்னேற்றத்துக்கு ஏதுவான சாதக மாற்றங்கள் நிகழும்.
கடன் தொல்லைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்தும் பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குருவின் ஆசியால் பொன் பொருள் குவியும்.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் இந்த குரு பெயர்ச்சி நிகழ்வதால் தொழில், மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்கள் உருவாகும்.
நிதி நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய வழிகளில் வருமானம் பெருவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும்.
கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், இவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நனவாகும். நிதி நிலை வலுவடையும்.
புதிய நிலம், வீடு வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும். இவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும்.
குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அது போல் குருவின் ஆசியால் இவர்களுக்கு பணம் உட்பட செல்வ செழிப்பு அபரிமிதமாக அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |