குருவின் இடமாற்றம்.. யோகம் பெறப்போகும் கன்னி ராசியினர்
குரு பெயர்ச்சி என்பது ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 30 தேதி குரு பெயர்ச்சி நடக்கிறது.
அவர் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்ல இருக்கிறார். இந்த பெயர்ச்சியானது கன்னி ராசிக்கு எந்த விதமான பலன்களை கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
குரு பகவான் ஒரு முழு சுப கிரகம். பிறப்பிலேயே நல்லவனாக இருக்கக்கூடிய குரு பகவான், ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியை பார்க்கும் பொழுது பலவிதமான யோகங்கள் கிடைக்கும்.
இதனால் உங்களுடைய மனதில் ஒரு தெளிவு பிறக்கும். அதேபோல மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்கும் படி செய்வார்.
நல்ல வேலை, செல்வம், புத்திர பாக்கியம், பொருள் வரவு புகழ் உள்ளிட்டவற்றை கொடுப்பார்.
உங்களுக்கு 3-ம் இடமான விருச்சிக ராசியை அவர் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் நண்பர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
கன்னி ராசியை பொருத்தவரை அவருக்கு நண்பராக இருப்பவர்கள் அவர்களுக்கு நல்லது செய்ததாக வரலாறே கிடையாது.
பெரும்பான்மையான கன்னி ராசிக்காரர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது அவருடைய நண்பர்கள் தான். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அந்த மாதிரியான நண்பர்கள் விலகி, நல்ல நண்பர்கள் உங்களிடம் வந்து சேர்வார்.
பூர்வ ஜென்மஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக குரு பார்ப்பதால் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |