நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியால் இந்த ராசிக்கு தான் அதிர்ஷ்டம்! முழு விபரங்கள்
வருகிற 13ம் தேதி மாலை 6.21 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார் குரு பகவான்.
இதனால் மிதுனம், சிம்மம் மற்றும் துலாம் ராசியினர் நன்மையை அடையவிருக்கிறார்கள்.
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்களைப் பெறும் ராசிகள், மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் - கும்பம் ஆகும்.
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் என்றால், கடகம் - கன்னி - தனுசு - மீனம் ஆகும்.
குரு பகவான் பற்றிய முழு விபரம்
சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதான தலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு