குஜராத் ஸ்டைலில் Dal Togli செய்ய தெரியுமா? இனி இப்படி செய்து பாருங்க
வட இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதியில் சமைக்கப்படும் உணவுகள் தென்னிந்திய உணவுகளிலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.
அத்துடன் அதன் சுவையும் அப்படி இருக்கும் என சாப்பிட்டவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் குஜராத்தில் தால் தோக்லி என்ற உணவு பிரபலமாக உள்ளது.
இதனை எப்படி இலகுவாக செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- பூண்டு - 5 பல்
- கோதுமை மாவு- 1 கப்
- ஓமம் - 1/4 டீஸ்பூன்
- நெய் - 3 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- மல்லி இலை - ஒரு கைப்பிடி
தால் தோக்லி செய்முறை
குக்கரில் தேவையான அளவு தண்ணீர் வைத்து அதில் அரை கப் அளவு துவரம் பருப்பை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து மூடவும். 5 விசில் வரை வேக விடவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாதி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மா உருண்டைகளை சாப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய கடாயில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் போட்டு வதக்கவும். கடாய் சூடானதும் கடுகு வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது பருப்பை கடாயில் கொட்டவும்.
பருப்புக்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகாய், மல்லித்தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த வந்ததும் நறுக்கிய வைத்த மா துண்டுகளை சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.
சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தால் தோக்லி தயார்!
இறுதியாக தால் தோக்லிக்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |