பார்ப்பவர்களை மிரள வைக்கும் கின்னஸ் சாதனை: என்ன செய்தார் தெரியுமா?
இன்றைய மனிதர்கள் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான செயல்களின் மூலம் உலகில் பிரபலமாகி வருகிறார்கள்.
33 விநாடிகளில் கின்னஸ் சாதனையா
இதன்படி, உலகின் உண்பதற்கு எடுத்துக் கொள்ளவே முடியாத மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை உட்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குறித்த நபர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர் என்பவர் ஆவார், மேலும் இவர் 10 கரோலினாரீப்பர் காரமான மிளகாய்களை 33.15 வினாடிகளில் சாப்பிட்டு முடித்துள்ளார்.
காரத்தை அளவீட்டு முறை
பொதுவாக உணவுடன் உட்கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகின் மூலமாகவே மதிப்பிடுவார்கள்.
இதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றின் காரம் 16 லட்சத்து 41 ஆயிரத்து 184 SHU என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.