2 லிட்டர் சோடாவை 19 வினாடியில் குடித்து உலக சாதனை படைத்த நபர்- குவியும் வாழ்த்துக்கள்
அமெரிக்காவை சேர்ந்த சாப்பாட்டு நபரான ஒருவர் யாரும் நம்ப முடியாத சாதனை ஒன்றை செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் Eric “Badlands” Booker(எரிக் “பேட்லேண்ட்ஸ்” புக்கர்). இவர் 19 வினாடிகளில் 2 லிட்டர் பாட்டில் சோடாவை குடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும், அந்த நபர் பானங்களை அதிவிரைவாக குடித்து முடிக்கும் தனது திறன்களை வீடியோ எடுத்து தனது பிரபல யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்தார்.
அதன் பின்னர் கின்னஸ் உலக சாதனையின் (Guinness World Record) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டது. மேலும், BadlandsChugs என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் எரிக், ரேப் பாடகராகவும் இருக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் படை பாடி அதை வீடியோ எடுத்து போடுவது, செல்லும் இடங்கள் பற்றி Vlog போடுவது மற்றும் தனது அதீத சாப்பாட்டு திறன் பற்றி ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அவ்வப்போது வீடியோ போடுவது என பன்முக திறமை கொண்டவராக இருந்து வருகிறார்.
இதனையடுத்து, இந்த சாதனை வீடியோவை கண்ட ரசிகர்கள் மற்றும் அவரது சப்ஸ்கிரைபர்கள் எரிக்கின் உலக சாதனைக்கு வாழ்த்துகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்தனர்.
இந்த வீடியோவுக்கு பதிலளித்த மக்கள், மற்றும் எரிக் செய்வது போல் யாரோ கோலா ஊற்றுவதை ரசிப்பதை தாம் பார்க்கவில்லை என்று கூறினர்.