இதய நோய் முதல் ஆஸ்துமா வரை... கொய்யா இலை செய்யும் அற்புதம்
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொய்யா பழத்தைப் போன்று இதன் இலைகளில் நிறைந்துள்ள ஆயுர்வேத பண்புகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
அதிகமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ள கொய்யாப்பழம் ஆரோக்கிய நன்மையில் ஏற்றதாக இருக்கின்றது.
இதே போன்று கொய்யா இலைகளை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கொய்யா இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்
கொய்யா இலைகளானது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றதாகவும், இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறவும், அழற்சி எதிர்ப்பு கூறுகளும் காணப்படுகின்றது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கொய்யா இலைகள், கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பைக் குறைப்பதுடன், பக்கவாதம், மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.
கொய்யா இலைகள் அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலமும், ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிப்பதுடன், வயிறு வீக்கம், வயிற்றுப் போக்கு போன்ற செரிமான பிரச்சனையை தீர்க்க உதவுகின்றது. கொய்யா இலைகளை கஷாயம் செய்து குடித்தால், வாந்தி குறைக்கும்.
கொய்யா இலைகளில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்று நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது.
கொய்யா இலைகள் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வயதான அறிகுறிகள் உட்பட பல்வேறு தோல் பிரச்சினைகளை குணப்படுத்தப் பயன்படுவதுடன், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
கொய்யா இலையினை மென்று சாப்பிட்டால், பல்வலி மற்றும் ஈறு பிரச்சினைகளைக் குறைப்பதற்கு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தீர்வும் அளிக்கின்றது.
மாதவிடாய் பிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கவும், வலியின் தீவிரத்தையும் குறைப்பதுடன், எடை இழப்பிற்கும் உதவுகின்றது.
எப்படி பயன்படுத்துவது?
புதிய அல்லது உலர்ந்த கொய்யா இலைகளை தண்ணீரில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் அல்லது எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.
கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு, தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பின்பு குறித்த தண்ணீரில் அலசவும், தலைமுடியை வலுப்படுத்தி, முடி உதிர்தலை குறைக்கின்றது.
உங்கள் குளியல் நீரில் கொய்யா இலைகளைச் சேர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு நிம்மதியான மற்றும் நறுமணமிக்க குளியலை அளிக்கும்.
இதய நோய் முதல் ஆஸ்துமா வரை... கொய்யா இலை செய்யும் அற்புதம்
.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |