உயிரை பறிக்கும் நீரிழிவு நோயை ஓட ஓட விரட்டும் கொய்யா!
நீரிழிவு நோய் இன்று பலரை ஆட்டிப்படைக்கும் ஆபத்து.
டைப் 1 நீரிழிவு நோயை விட டைப் 2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது. டைப் 2 நீரிழிவு நோயில் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது.
இந்த ஆபத்துக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு பிரச்சினையாக முடியும்.
பணம் செலவு செய்யாமலே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயை கொய்யா பழத்தினை வைத்தே விரட்டியடிக்க முடியும்.
கொய்யா பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது பல வித நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயை ஓட விரட்டும் கொய்யா
கொய்யாவில் பலவகைகள் உள்ளன. இவை அனைத்தினதும் மருத்துவப் பயனும் ஒன்றாகும். இதில் அதிகளவு விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் கொய்யாவில் தான் அதிகளவு விட்டமின் சி சத்து உள்ளது.
நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும்.
ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது.
மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.