லண்டனில் பதுங்கு குழிக்குள் சிறப்பாக நடைபெறும் விவசாயம்
உலகம் முழுவதிலும் உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், உணவு உற்பத்திக்காக பல்வேறு நவீன தொழில்நுட்ப மற்றும் மரபு ரீதியான வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இரண்டாம் உலகப் போரின்போது விமானத் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக லண்டனில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி, செழிப்பான விவசாய பூமியாக மாற்றப்பட்டுள்ளது.
பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்ட விவசாய பண்ணைகளில் மூலிகைகள், சலாட்கள் பயிர்ச் செய்யப்படுகின்றது.
தென் லண்டனின் க்ளப்ஹாம் பகுதி அதிக சனநெரிசல் கொண்ட பகுதியாகும், இங்கு மரபு ரீதியான விவசாயம் செய்வது சாத்தியமற்றதாகும்.
எனினும், 30 மீற்றர் கீழே ஒரு கிலோ மீற்றர் நீளமான சுரங்கப் பாதைகளில் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் விவசாயம் செய்வது நடைமுறைச்சாத்தியமாகியுள்ளது.
முளைகட்டிய பச்சை பட்டாணி, நீர்புகா கீரை உள்ளிட்ட தாவரங்களுக்கு உள்நாட்டு சந்தையில் பெரும் கிராக்கி நிலவுகின்றது.
இந்த வகை விவசாய செய்கைக்கு நல்ல எதிர்காலம் காணப்படுவதாக பண்ணையின் பிரதம செய்கையாளர் Tommaso Vermeir தெரிவிக்கின்றார்.
இந்த தொழில்நுட்பத்தின் பிரதான அம்சமாக சூழலை கட்டுப்படுத்தி விவசாய செய்கையில் ஈடுபடக்கூடிய ஓர் நிலையை குறிப்பிட முடியும்.
உணவுப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இந்த விவசாய முறைமை நல்ல பலனைத் தருவதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் செயற்கை வெளிச்சத்தில் பயிர்ச் செய்கை செய்வதனால் மரபு ரீதியான விவசாயத்தை விடவும் கூடுதல் அளவில் எரிசக்தி தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீளப் பயன்படுத்தக் கூடிய சக்தி வளங்களின் ஊடாக இந்த விவசாய செய்கை மேற்கொள்வதற்கு முனைப்பு காட்டப்படுகின்றது.
வழமையாக பயன்படுத்தப்படும் நீரை விடவும் 70 முதல் 90 வீதமான அளவு குறைந்த நீர் பயன்படுத்தப்படுகின்றது என்பதுடன் 95 வீதம் குறைந்தளவு பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Images: (Dan Kitwood/Getty Images)