நாவூரும் சுவையில் வேர்கடலை சிக்கன் ரோஸ்ட்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே விதவிதமாக உணவு சமைத்து சாப்பிடுவதென்றால் அனைவருக்குமே பிடிக்கும்.அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவும் வேண்டுமா?
குறிப்பாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டடியலில் சிக்கன் முக்கிய இடம் பிடித்து விடுகின்றது. காரணம் சிக்கன் எந்த உணவுடனும் சிறப்பாக பொருந்தும்.
அதுமட்டுமன்றி சிக்கனை பல வகைகளில் வித்தியாசமான பாணிகளில் சமைக்க முடியும். அந்த வகையில் அசத்தல் சுவையில் அருமையான வேர்கடலை சிக்கன் ரோஸ்ட்டை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து பொடி செய்வதற்கு
வேர்க்கடலை - 4 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
சிக்கன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கரம் மசாலா - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி
தயிர் - 1/4 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூமானதும், வேர்க்கடலையைப் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து 1 நிமிடம் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கி,அதனுடன் சிக்கனை கழுவி சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் தயிரை ஊற்றி கிளறி, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பாத்திரத்தை மூடி 10 நிடிடங்கள் வலையில் வேகவிட வேண்டும்.
ஓரளவு தண்ணீர் வற்றி ரோஸ்ட்டாகும் வரை வேக வைத்து, இறுதியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |